யாழில் கைதான 05 பேர் : வெளியான காரணம்!

யாழில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 05 பேர் கைது செய்யப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகமம் பகுதியில் கொடிய ஹெரோயின் பாவனை தொடர்பில் இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரின் வீட்டை சுற்றிவளைத்த போது 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் தர்மபுர மற்றும் பளை தம்பகாமம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை இன்று (10-11-2022) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleஓமானில் விற்கப்படும் இலங்கைப்பெண்கள்; சிஐடி விசாரணை !
Next articleநெடுந்தீவு லக்ஸ்மன் காலமானர் !