அவுஸ்திரேலிய பெண் தொடர்பில் தனுஷ்க குணதிலக்க வெளியிட்ட தகவல்!

குணதிலக்கிற்கு சட்ட ஆதரவை வழங்கும் சட்ட நிறுவனத்திடம் தனுஷ்கா, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நிரபராதி என்று கூறியுள்ளார்.

சிட்னியைச் சேர்ந்த சான்ஸ் லா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தனுஷ்கா குணதிலக் குற்றமற்றவர் என அறிவித்துள்ளதாக சட்ட நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விசாரணையின் ஆரம்ப கட்டத்தை கருத்தில் கொண்டு மேலதிக தகவல்களை வழங்க அவரது நிறுவனம் தயாராக இல்லை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் மீது பலாத்காரம் உட்பட நான்கு குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதாயையும் மகளையும் உயிருடன் மண்ணுக்குள் புதைத்த மகன் : வெளியான காரணம்!
Next articleபெண்ணை மூச்சடைக்க செய்த தனுஷ் குணதிலக்க-வழக்கில் இருந்து விலகிய சட்டத்தரணி!