யாழில் இன்று பகல் அரங்கேறிய பகீர் சம்பவம் !

யாழ். அரியாலை – தபால்கட்டை சந்தியில் இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் வீதியில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள் ஒன்றை குடைக்குள் மறைத்து வைத்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மறுபுறம் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் வேளையில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்று இடம்பெற்ற கோர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Next articleயாழில் பரபரப்பு; இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல்!