யாழில் பரபரப்பு; இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக நேற்று இரவு 9 மணியளவில் கண்ணாடி போத்தல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய பிரதித் தூதுவரால் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து யாழ் பொலிஸாரும் யாழ்ப்பாண பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.