தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன்!

வீட்டின் வரவேற்பறையில் உறங்கிக் கொண்டிருந்த 63 வயதுடைய தந்தையை தாக்கி படுகொலை செய்த மனநலம் குன்றிய மகனை கைது செய்துள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கொலை இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் செயற்பட்ட குளியாபிட்டிய பொலிஸார் பொல்கொல்லேவ பிரதேசத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்தவரின் மகனையும் கைது செய்தனர்.

சம்பவத்தில் சரத் குமாரசிங்க என்ற 63 வயதுடைய மொரகல் ஜிதிதுராயலகே என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மகன் மனவளர்ச்சி குன்றியவர் எனவும், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Previous articleயாழ்ப்பாணம் செல்லவே மாட்டோம்…. கனடாவுக்கு கூப்பிடுங்கோ!! மூழ்க இருந்த கப்பலில் சென்றவர்கள் வெகுளித்தனமாக ஆர்ப்பாட்டம் செய்து அழுது குழறும் காட்சிகள் இதோ!! (Video)
Next articleஇலங்கையில் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து !