கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாயொருவர் பலி!

கிளிநொச்சி மாவட்டம் உமையாள்புர பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் உமையாள்புர பகுதியில் ஏ9 வீதியில் நடந்து சென்ற தாய் ஒருவரை பின்னால் வந்த சாரதி பயிற்சி வாகனம் மோதியதுடன், சாரதி பயிற்சி நிலையத்தில் சாரதி பயிற்சி அளிக்கும் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் அதே ஊரைச் சேர்ந்த 4 குழந்தைகளின் தாயான முகமது நாசிம் யோகலட்சுமி (69) என்பது தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous articleஇலங்கையில் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து !
Next articleவடமாகாணத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : வெளியான காரணம்!