யாழில் வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் கைக்குழந்தையும் இன்று மீட்கப்பட்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிருசுவில் தெற்கு பகுதியை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரது 7 மாத குழந்தை பிரகாஷ் காருண்யா ஆகியோர் சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர்.

வியாழக்கிழமை இரவு கணவன்-மனைவிக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவி மற்றும் குழந்தையைக் காணவில்லை எனவும், காலையில் கணவன் தேடியதையடுத்து காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

யாழில் யுவதி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேநேரம் சம்பவ இடத்திற்குச் சென்ற சவாகச்சேரி நீதிபதி ஏ.ஜூட்சன் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

Previous articleவடமாகாணத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : வெளியான காரணம்!
Next articleமுன்னாள் யாழ்.மாவட்டச் செயலருக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி!