முன்னாள் யாழ்.மாவட்டச் செயலருக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி!

முன்னாள் யாழ் மாவட்ட செயலாளர் நா. வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களில் மூவர் பதவிகளை இழந்த நிலையில், தற்போது புதிதாக மூவர் நியமிக்கப்பட்டு அவர்களில் ஒருவரான வேதநாயகன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அதிபராக இருந்த இமெல்டா சுகுமாரும் மற்றுமொரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous articleயாழில் வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் சடலமாக மீட்பு!
Next articleஇனி சதொசாவிலும் மது விற்பனை : வெளியான அறிவிப்பு!