இனி சதொசாவிலும் மது விற்பனை : வெளியான அறிவிப்பு!

நாடு முழுவதும் 300 சதொசகடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, கலால் அறிவிக்கையின் 902ஆவது பிரிவின் கீழ் அனைத்து சாத்தோ கடைகளுக்கும் உடனடியாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மறுபுறம் மதுபான அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த சில சதோ நிறுவனங்கள் உரிய தகைமைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த சில சதொச கடைகளுக்கு இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உரிய அனுமதிகளை அங்கீகரித்ததன் பின்னர் சதொச நிறுவனங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுன்னாள் யாழ்.மாவட்டச் செயலருக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி!
Next articleசிறுமியை வைத்தியசாலையில் சேர்த்துவிட்டு தப்பி ஓடிய இரு இளைஞர்கள் – சிறுமி உயிரிழப்பு