யாழில் 221 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது – 14 குடும்பங்கள் இடம்பெயர்வு !

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என். சூரியராஜா தெரிவித்தார்.

அவர்களில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

பருத்துறை பிரதேச செயலர் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேரும், யாழ். பிரதேச செயலர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். .

அத்துடன் பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Previous article9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் புத்தகப்பையில் 61 ஸ்மாட் போன்கள் – அதிர்ச்சியில் பொலிஸார்
Next articleயாழில் கரையொதுங்கிய டொல்பின் மீன் !