யாழில் வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 20 வயது இளைஞன் கைது!

யாழில் வீடுடைத்து கொள்ளைில் ஈடுபட்ட 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரின் விசாரணைக்கு பின்னர் வீட்டில் இருந்து தொலைக்காட்சி திருடப்பட்டது

நீர் இறைக்கும் இயந்திரம் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இளைஞரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.