வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக மோசடி – 570 முறைப்பாடுகள் பதிவு !

வெளிநாடுகளில் வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

182 முறைப்பாடுகள் நீதிமன்ற நடவடிக்கைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், முறைப்பாட்டாளர்களுக்கு 2 கோடியே 83 லட்சத்து 83 ஆயிரம் ரூபா பணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் பணியகம் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 17 சுற்றிவளைப்புகளில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பணியகம் குறிப்பிடுகிறது.

Previous articleயாழில் 4வயதுச் சிறுமியை தாக்கி சித்திரவதை செய்த தந்தை கைது!
Next articleயாழ். போதனாவில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவணி – மக்களுக்கும் அழைப்பு!