படகு கவிழ்ந்ததில் பதின்ம வயது சிறுமிகள் மூவர் மாயம்!

சூர்யவேவ – மஹாவெலிகடாரா ஆற்றில் படகு சவாரியின் போது படகு கவிழ்ந்ததில் மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது படகில் 8 பேர் பயணித்துள்ளதுடன், படகில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 5 பேரை பிரதேச மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், காணாமல் போன மூன்று சிறுமிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கி மீட்கப்பட்ட 8 மாத குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர். 18, 17 மற்றும் 10 வயதுடைய சிறுமிகளே காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் குருநாகல் பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், இது தொடர்பான நிகழ்வு ஒன்றிற்காக இந்த பகுதிக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் எட்டு பேர் பயணித்ததாகவும், படகு நடு ஆற்றில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleபிரான்ஸில் தரையிறங்கிய கப்பல் அகதிகளை 11 ஜரோப்பிய நாடுகள் பகிர்ந்து ஏற்பு!
Next articleடிவி பிரபலத்தோடு குக்வித் கோமாளி புகழ் ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்!