திடீரென உயிரிழந்த இளம் நடிகரால் அதிர்ச்சி!

இந்தியா- மும்பையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த டிவி நடிகர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தாந்த் வீர் சூர்யவன்சி (46) இந்தியில் பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

மும்பையில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு அந்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சித்தாந்த் வீர் சூர்யவன்சியின் மரணம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், இறந்த சித்தன் வீர் சூர்யவன்சிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleடிவி பிரபலத்தோடு குக்வித் கோமாளி புகழ் ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்!
Next articleசவூதியில் உயிரிழந்த தவராசாவின் உடல் குடும்பத்தவரிடம் ஒப்படைப்பு !