மது அருந்தியவரை கைது செய்த பொலிஸாரை கூறிய ஆயுதத்தால் தாக்கிய குடிமகன்!

கலவானை நகரில் மது அருந்திக் கொண்டிருந்த நபரை கைது செய்ய முயன்ற உப பொலிஸ் பரிசோதகர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்ய முற்பட்ட போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காயமடைந்த நபர் கலவானை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் என கலவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மது அருந்திய சந்தேக நபர் கலவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleசவூதியில் உயிரிழந்த தவராசாவின் உடல் குடும்பத்தவரிடம் ஒப்படைப்பு !
Next articleயாழில் நேருக்கு நேராக மோதிய முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும்!