வவுனியாவில் பாதுகாப்பற்ற நிலையில் பயணிக்கும் கர்ப்பவதிகள்!

வவுனியா – நொச்சிமோட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு செல்லும் பிரதான வீதி சாந்தசோலை கிரேசர் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதி குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.

நிலையத்திற்கு பயணிக்கும் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் தற்போது பயணிக்கின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே பாதுகாப்பாக குடும்ப நலன்புரி நிலையத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு சாந்தசோலை மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1994ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குறித்த வீதி கடந்த 28 வருடங்களாக புனரமைக்கப்படவில்லை.

இந்த சாலையில் அமைந்துள்ள தாய்சேய் நிலையத்திற்கு நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவில் உள்ள துவரங்குளம், பேயடிகூலாங்குளம், மணிகர்வாலு, தம்பனைச்சோலை, சாந்தச்சோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த கற்பவதிகள் பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

சந்தச்சோலை பிரதான வீதி காபட் வீதியாக அமைக்கப்பட்டுள்ள போதிலும் மேற்படி கிரேசர் வீதி செப்பனிடப்படவில்லை.

இது தொடர்பில் தமிழ் தெற்கு பிரதேச சபை அதிகாரிகளிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் முறையிட்டும் வீதி சீரமைக்கப்படவில்லை.

எனவே, கர்ப்பிணிப் பெண்கள் ஆபத்தான முறையில் இவ்வீதியில் பயணிப்பதால் கர்ப்பிணிகளுக்கு மேலும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சாலையை தற்காலிகமாக ஜல்லிக்கற்களால் செப்பனிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சாந்தசோலை மாதர் சங்கமும் கூறியுள்ளது.

Previous articleநிர்மன்லி லியனகே திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்!
Next articleபெண் அதிகாரியின் கழுத்தை பிடித்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு ஆப்பு!