பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் வெளியான காரணம்!

மாத்தளை – உக்குவெல லெலியம்ப பிரதேசத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.

இந்த சோக சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவனின் சகோதரர்கள் இருவரும் பாடசாலைக்குச் செல்லத் தயாரானபோது, ​​அவர்களது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் தாய் மற்றும் பிள்ளைகளைத் தாக்கியுள்ளார்.

சம்பவத்தின் போது அவர்களது தந்தை வேலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில், லெலியம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய தாய், 19 வயதுடைய மகள் மற்றும் மற்றுமொரு சிறுவன் பாரிய காயங்களுடன் மாத்தல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleமட்டக்களப்பில் ஒருதலைக் காதல் தற்கொலையில் முடிந்தது !
Next articleகைலாசாவில் வேலைவாய்ப்பு இலங்கையர்களை அழைக்கும் நித்தியானந்தா!