யாழில் இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சட்டவிரோதமான பொருளுடன் கைதான நபர்!

யாழில் இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.குருநகர் கடற்பரப்பில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கஞ்சாவை கடத்த பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் சந்தேக நபரையும் பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழ்ப்பாணத்தில் பேரணி; பெருமளவானோர் பங்கேற்பு !
Next articleதுயிலுமில்லத்தை துப்புரவு செய்த மக்களை இராணுவ முகாமிற்கு அழைத்து 27ம் திகதி விளக்கேற்ற கூடாது என மிரட்டல்! விளக்கேற்றுவோம் என பதிலளித்த மக்கள்…!