கொழும்பில் பொலிசாருடன் ஹிருணிக்கா கடும் வாக்குவாதம்; இருவர் கைது!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக இன்று கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு ஹிருனிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் தலைமை தாங்கியுள்ளனர்.

இதில், பெண்கள் சிவப்பு நிற ஆடை, தலையில் சிவப்பு பட்டை அணிந்து, ஏராளமானோர் சிவப்பு கொடி ஏந்தி வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பில் பொலிஸ் வேடமணிந்து வீதி நாடகம் நடத்திய இருவரை கருவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ஹினிக்கா உள்ளிட்ட பெண்கள் குழுவினர் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை கைது செய்யுமாறும் அவர்களும் வாதிட்டதாக கூறப்படுகிறது.

Previous articleதுயிலுமில்லத்தை துப்புரவு செய்த மக்களை இராணுவ முகாமிற்கு அழைத்து 27ம் திகதி விளக்கேற்ற கூடாது என மிரட்டல்! விளக்கேற்றுவோம் என பதிலளித்த மக்கள்…!
Next articleயாழில் சுடு தண்ணீரால் மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!