கட்டாயமாகும் அடையாள அட்டை – இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பயணத்தின் போது அடையாளத்தை நிரூபிப்பதற்காக உரிய ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பதன் மூலம் அசௌகரியங்களை தவிர்க்க முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே பொலிஸார் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஒருவர் பணியமர்த்தப்பட்டால், அந்த நபர் தொடர்பான முறையான ஆவணங்களை சரிபார்ப்பதற்கு முதலாளி மற்றும் பணியாளரின் பாதுகாப்பிற்கு முக்கியம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 12ஆம் திகதி தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த நபரை கைது செய்துள்ளனர். இந்த கைது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

உரிய ஆவணங்கள் இன்றி குறித்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புக்கள் காரணமாக சந்தேகத்திற்கிடமான வகையில் செயற்படும் நபர்களை கைது செய்ய தமக்கு உரிமை உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, முடிந்தவரை ஆவணங்களை வைத்திருக்குமாறு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleதனுஷ்க விடுதலைக்காக தாயார் செய்த செயல்!
Next articleதிருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய காதலன்!