திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய காதலன்!

26 காதலியை கொன்று, உடலை 35 துண்டுகளாக வெட்டி, 18 வெவ்வேறு இடங்களில் வீசிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை காதலன் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறும்போது, “26 வயதான ஷ்ரத்தா மும்பையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் வேலை பார்த்துவந்தார்.

அவருக்கும் அஃப்தாப் அமீன் பூனாவாலா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அஃப்தாப் அமீன் பூனாவாலா இன்ஸ்டாகிராமில் ‘ஹங்கிரி சோக்ரோ’ என்ற உணவு வலைப்பதிவு கணக்கை நடத்தி வந்தார். அந்த கணக்கில் உணவு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் ஷ்ரத்தா, அஃப்தாப் உறவை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி டெல்லியில் மெஹ்ராலி நகரில் வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்யுமாறு ஷ்ரத்தா வலியுத்த, அஃப்தாப் அமீன் பூனாவாலா அதை மறுத்து வந்தார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சச்சரவு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 18 ஆம் திகதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் அஃப்தாப். பின்னர் அவரது சடலத்தை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார். அதனை வைக்க ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். சடலத்தை வெட்டி ஃப்ரிட்ஜுக்குள் பதுக்கி வைத்தவர். அடுத்த 18 நாட்களில் அதனை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துள்ளார். இதற்காக அன்றாடம் அதிகாலை 2 மணியளவில் அவர் வெளியே சென்று சத்தர்பூர் வனப்பகுதியில் உடல் உறுப்புகளை வீசினார்.பல்வேறு இடங்களில் சடலத்தின் பாகங்களை

மகளிற்கு தந்தை பலமுறை தொலைபேசி அழைப்பு மேற்கொண்டார். பதிலிருக்கவில்லை. அவரது சமூக ஊடகப்பக்கங்களிலும் வாரக்கணக்கில் புதிய பதிவுகள் இல்லாததால், அவரது தந்தை விகாஸ் – பால்கர் (மகாராஷ்டிரா) வசிப்பவர், நவம்பர் 8 ஆம் திகதி தனது மகளைப் பார்க்க டெல்லிக்கு வந்தார். மகளின் குடியிருப்பை அடைந்தபோது, ​​அது பூட்டப்பட்டிருந்தது.

அவர் மகளைக் காணவில்லை என்று எங்களிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சனிக்கிழமை அஃப்தாபை கைது செய்தோம். அஃப்தாப் அளித்த வாக்குமூலத்தின்படி உடல் பாகங்களை தேடி வருகிறோம்” என்று தெரிவித்தது.

தன்னை திருமணம் செய்யுமாறு ஷ்ரத்தா வலியுறுத்தியதால் அவரை கொன்றதாகவும், விலங்குகள் சாப்பிடும் என்ற நம்பிக்கையில் உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றிற்கு வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous articleகட்டாயமாகும் அடையாள அட்டை – இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Next articleயாழில் கோப்பாயில் 24 போத்தல் கசிப்புடன் 3 பேர் கைது!