யாழில் கோப்பாயில் 24 போத்தல் கசிப்புடன் 3 பேர் கைது!

கோப்பாய் பொலிசாரினால் இன்று (11) திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் போதை பொருட்களுன் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந் நிலையில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கனை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

சுற்றி வளைப்பின் போது ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 24 போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleதிருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய காதலன்!
Next articleமட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு!!