அதிகார பகிர்வும் தென்னிலங்கை மக்களின் தெளிவின்மையும்!


கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த “அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு” குறித்த செயலமர்வு, நேற்றைய தினம் கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் சபை அறையில் நடை பெற்றது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆன M.A. சுமந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இவ் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் அபிவிருத்தியும் அதிகாரபகிர்வு தொடர்பாக பல சந்தேகங்களுக்கான விளக்கங்களும் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னால் ஆளுநர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னால் மாகாண சபைகளுக்கான அமைச்சின் செயலாளர், சமூக ஆர்வலர்கள், மற்றும் பல அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்தியும் அதிகாரபகிர்வு தொடர்பாக பலருக்கு சந்தேகம் உள்ளது அதிலும் தென் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளது அவர்களுக்கு பிழையான கருத்துக்கள் இனவாதிகளினால் ஊட்டப்படுள்ளது.

அவை தொடர்பான விளக்கங்களையும் தெளிவூட்டல்களையும் வழங்குவதற்கு என இவ் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இலங்கை முழுவதுமாக காணப்படும் அரசில் தீர்வு அதிகாரப் பகிர்வு மற்றும் இவற்றினூடான பொருளாதார அபிவிருத்தி என்பன சம்பந்தமாக சேவையாற்றும் 280 அமைப்புக்களை மிக விரைவாகவும் துரிதமாகவும்சந்தித்து இவ்வாறான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்

Previous articleமட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு!!
Next articleயாழில் பெண்களிடம் சேட்டை விட்ட 13 பேரை பொலிஸார் மறைந்திருந்து நோட்டமிட்டு வலைவீசி கைது செய்துள்ளனர்.!