யாழில் வீதியால் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணக் கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஒழுங்கையில்  சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரிடமிருந்து தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியில் சென்ற பெண்ணை வழிமறித்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான சி.சி.ரி.வி.

பதிவு செய்யப்பட்ட காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.

சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கோவிலுக்கு சென்று வழிபடுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Previous articleபரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!
Next articleமின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய குடும்பஸ்தர் பலி!