மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய குடும்பஸ்தர் பலி!

மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

புத்தளம் உடப்பு பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதி கஜித் (வயது 28) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடப்பு பரிபாடு கடற்கரையில் மின்னல் தாக்கியதில் இழுவை மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நால்வரும் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் உடப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக சிலபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleயாழில் வீதியால் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Next articleவிபத்தில் பரிதாபமாக பலியான தந்தை மற்றும் மகள்!