விபத்தில் பரிதாபமாக பலியான தந்தை மற்றும் மகள்!

விபத்தில் தந்தையும், மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீரிகம பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கி பயணித்த காருடன் தந்தையும் மகளும் மோதியதில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த தந்தைக்கு 54 வயது எனவும் மகளுக்கு 14 வயது எனவும் தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்பு முடிந்து தனது மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

Previous articleமின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய குடும்பஸ்தர் பலி!
Next articleநடுக்கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை தமிழர்கள் விடுத்துள்ள கோரிக்கை!