அடுத்தடுத்து 40 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தளை சுஜாதா பெண்கள் பாடசாலை மாணவிகள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

திடீர் சுகவீனம் காரணமாக சுமார் 40 மாணவிகள் மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று காலை நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில் இந்த சிறுமிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை பள்ளியில் தங்களது வெற்றியை கொண்டாடும் வகையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் கலந்து கொண்ட போது, ​​மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

இதனை அடுத்து சிறுமிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுமிகளின் உடல்நிலை சீராக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஎன்னது ஜனனி காதலிகின்றாரா? உண்மையைப் போட்டுடைத்த நண்பர்கள் !
Next articleயாழ் மக்களுக்கான முக்கிய வேண்டுகோள்..!