யாழ் மக்களுக்கான முக்கிய வேண்டுகோள்..!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன.

இந்த கல்வெட்டுகள் நவம்பர் 21ம் தேதி காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நவம்பர் 27ம் தேதி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அந்த நேரத்தில் அனைத்து மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தலாம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் உடக அமியத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக, குறித்த கல்வெட்டுகள் யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதிகளைப் பெற்று வைக்கப்படும்.

இறந்த தங்கள் உறவினர்களை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் நமது சகோதர சகோதரிகளை நினைவுகூருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Previous articleஅடுத்தடுத்து 40 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleவெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் – வெளியானது அறிவிப்பு !