வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் – வெளியானது அறிவிப்பு !

வெளிநாட்டில் பணிபுரிய செல்வோருக்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்பவர்களின் பாதுகாப்பு முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு உரிய தொழிற்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் குறுகிய அரசியல் நோக்கங்களில் செயற்பட்டு நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.