மனித முக அமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி! வைரலாகும் புகைப்படம் !

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகை மாவட்டத்தில், ஆடு ஒன்று மனித முகத்துடன் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள பிரதமராமபுரம் இசிஆர் மெயின் ரோடு ஒப்லு குளத்தான் கரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி.

விவசாயம் செய்து ஆடு வளர்த்து வரும் இவர், 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று ஈன்றுள்ளது.

இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், அந்த ஆடு மனித முகத்துடன் உள்ளது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் குறைகளுடன் பிறக்கும் பிராணிகள் நீண்ட நாள் உயிர் வாழாது… பிறக்கும்போதே உயிரற்றுப் பிறக்கின்றன.

அந்த ஆட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.