யாழ்.அல்லைப்பிட்டியில் பிறந்து 42 நாட்களேயான நிலையில் உயிரிழந்த குழந்தை!

பிறந்து 42 நாட்களே ஆன குழந்தை திடீரென சுகயீனமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த ராயதீபன் தனுஜன் என்ற 42 நாட்களே ஆன குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு தாய் பால் குடித்த குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிவதை நேற்று காலை பெற்றோர் பார்த்துள்ளனர்.

உடனடியாக குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

Previous articleயாழில் கோவிலை உடைத்து சமையல் பாத்திரங்களை திருடிய சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்!
Next articleஅரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய நடைமுறை !