வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். குடும்பஸ்த்தர்!

யாழினை சேரந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 48 வயதுடைய அச்சுதநாயகர் ஜெயந்தகுமார் என்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் கடந்த ஒரு வருடமாக வவுனியா கந்தன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள காணியை தனியாக பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை என பூவரசங்குளம் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த காட்டுப் பகுதியில் வைத்து நாட்டு துப்பாக்கியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் வாகன உரிமையாளர்கள் மற்றும் மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல் !
Next articleயாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞன் கைது!