கனடாவில் முதியவர்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது !

கனடாவில் பாரிய நிதி மோசடி தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்த் யோர்க் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரிடம் ஒரு மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.

டொராண்டோவில் உள்ள யோங்கே மற்றும் ஷெப்பர்ட் தெருக்களுக்கு அருகிலுள்ள தனது வீட்டைப் புதுப்பிக்க ஒரு கட்டுமான ஒப்பந்ததாரரிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.

குறித்த ஒப்பந்ததாரர் பெண்ணிடம் ஒரு மில்லியன் டொலர் வரை மோசடி செய்துள்ளார்.

இதேபோன்று பலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏமாற்றப்பட்டவர்களில் கணிசமானவர்கள் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 54 வயதான அன்டோனியோ சினோபோலி, 45 வயதான வெய்ன் மெக்நீல் மற்றும் 27 வயதான ரொறன்ரோவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ சினோபோலி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Previous articleகனடா பிரதமர் இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக குற்றம் சுமத்திய உலகப் பிரபலம்!
Next articleபிரான்ஸ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!