மடியில் வெடித்துச் சிதறிய லப்டொப் – மாணவன் உயிரிழப்பு!

மடியில் வைத்து லேப்டாப்பில் படம் பார்த்து கொண்டிருந்த இளைஞன் அது லேப்டாப் திடீரென வெடித்ததில் மாணவர் உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று கொப்பெய்டுடுவ பென்வல வீதி, இடிகெட்டியவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் செனடக் இதுவர என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பலபிட்டிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாணவன் நேற்று மதியம் கணினியுடன் சார்ஜரை இணைத்து கணினியை பயன்படுத்தியுள்ளார். அப்போது சார்ஜர் வெடித்தது.

இதனால் படுகாயமடைந்த மாணவன் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

Previous articleயாழில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Next articleஎரிபொருள் விலை அதிகரிப்பு !