இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து -சவப்பெட்டி வாங்கச் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் வண்டியொன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி வாகனச் சிப்புக்கு அடியில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நானுஓயா கெல்சி தோட்டத்தைச் சேர்ந்த டொமினிக் அனுஷன் (21 வயது) ஒரு பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் உள்ள பிரேத அறையில் சவப்பெட்டியை ஒப்படைத்து விட்டு சாரதி வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்று (16.11.2022) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், இன்று (17.11.2022) அதிகாலை அவ்வழியாகச் சென்ற தொழிலாளர்கள் விபத்து குறித்து நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, ​​டிரைவர் ஜீப்பில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

உயிரிழந்த நபரின் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஅவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற , நடமாட தனுஷ்கவுக்குத் தடை!
Next articleசட்டவிரோதாமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை கைது செய்த யாழ். கடற்படையினர்!