சட்டவிரோதாமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை கைது செய்த யாழ். கடற்படையினர்!

இலங்கையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் பருத்துறைக்கு அருகில் இன்று (16-11-2022) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ​​அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து -சவப்பெட்டி வாங்கச் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!
Next articleதமன்னாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான்.. வெளியான விவரம் !