தமன்னாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான்.. வெளியான விவரம் !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் தமன்னா. தற்போது தனது படங்களை படிப்படியாக குறைத்து வருகிறார். வாய்ப்புகள் வரவில்லையா, வரும் வாய்ப்புகளையெல்லாம் நிராகரிக்கிறாரா என்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தன் வீட்டில் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தமன்னா முன்பிருந்தே கூறி வருகிறார். தமன்னா தற்போது மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

முன்னதாக, தமன்னாவின் திருமணம் குறித்த செய்தி பரவினால், அது வதந்தி என்று அவர் உடனடியாக விளக்கினார். ஆனால் தற்போது திருமண செய்தியை அவர் மறுக்கவில்லை.

இதனால் தமன்னா மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாக தெரிகிறது. விரைவில் தமன்னா திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleசட்டவிரோதாமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை கைது செய்த யாழ். கடற்படையினர்!
Next articleநயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க சென்ற முன்னணி நடிகை.. வெளிவந்த புகைப்படம்