நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்? வாழ்த்து மழையில் ஜோடி !

திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திரங்களில் பிரபலமானவர் நிக்கி கல்ராணி – ஆதி ஜோடி . இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது திருமணம் கடந்த மே மாதம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் தேனிலவுக்கு பாரிஸ் சென்றனர்.

இருவரும் அங்கிருந்து எடுத்த புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் பெற்றோராக இருக்கும் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், நிக்கி கல்ராணி- ஆதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.