யாழில் குளத்தில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு !

யாழ்ப்பாணம் செம்மணிக் குளத்தில் நீரில் மூழ்கி நேற்று காணாமல் போன இளைஞரின் சடலம் நீண்ட தேடுதலின் பின்னர் இன்று மீட்கப்பட்டுள்ளது.

யாழ். செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் குளத்தில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி நேற்று காணாமல் போனார்.

குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று காணாமல் போயிருந்த நிலையில், அப்பகுதி மக்கள் உட்பட பலர் இரவு முழுவதும் நீண்ட நேரம் தேடினர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமட்டக்களப்பில் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் – சோகத்தில் மூழ்கிய கிராமம்!
Next articleகதிர்காமத்தில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு!