யாழ். பல்கலை இந்து பீடத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்க தீர்மானம்!

யாழ்.பல்கலைக்கழக இந்து சமய பீடத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு வருடாந்தம் சுமார் 100 மாணவர்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த (14.11.2022) அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்து நாகரிகம், சமஸ்கிருதம், சைவத் தத்துவங்கள் அடங்கிய தனிச்சிறப்பு வாய்ந்த பீடமாக 2019ஆம் ஆண்டு இந்து பீடம் நிறுவப்பட்டாலும், அதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகதிர்காமத்தில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு!
Next articleமன்னார் கடல் பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் விடுதலை !