யாழில் 12 வயது சிறுவனுக்கு 36 வயது நபரால் நேர்ந்த கொடூரம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 12 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து சந்தேகநபர் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டு வேலை செய்யும் 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மன்னாரை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!
Next articleபண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ். இளைஞர்கள் : வெளியான காரணம்!