யாழில் பாரிய சோகம்… சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை!

யாழ். குருநகரில் நேற்று (16) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குருநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய அலோசியஸ் ஜோன்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடலுக்குள் மீன் பிடிக்க சென்றவர் வலை வீசி மீன்பிடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் காணாமல் போன அவர், தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பீரேம்குமார் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.