யாழில் கைதான இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த நிலை தொடர்பில் வெளியான தகவல்!

நேற்று (16-11-2022) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடற்படையினரின் மேலதிக விசாரணைகளின் பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Previous articleயாழில் பாரிய சோகம்… சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை!
Next articleதமிழர் தாயகத்தில் மருத்துவ மாபியா; அம்பலப்படுத்திய தமிழ் பெண் மருத்துவரிற்கு நேர்ந்த கதி!