ஓமானில் இலங்கைப் பெண்கள் விற்பனை; தூதரக அதிகாரியை தூக்கிய அரசாங்கம்!

சுற்றுலா விசா மூலம் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டில், இலங்கையில் உள்ள ஓமானிய தூதரகத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி விசாரணைக்காக இலங்கைக்கு அழைக்கப்படுவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த கடத்தல் சம்பவத்தில் இலங்கை விமான நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஓமனில் பணிபுரியும் தூதரக அதிகாரி ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் அடிப்படையில் ஓமானில் பணிபுரியும் இலங்கை தூதரக அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.