கனடாவில் இந்தப் பகுதிகளில் கூரைகள் இடிந்து விழக்கூடிய அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை குறிப்பாக தெற்கு ஒன்டாரியோவில் உள்ளவர்களுக்கானது.

இந்த வார இறுதி வரை கடும் பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்ராறியோவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 40 முதல் 60 மீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக கூரைகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக கனடாவின் சுற்றுச்சூழல் வானிலை ஆய்வாளர் டேவிட் பிலிப்ஸ் எச்சரித்துள்ளார்.

இதனால் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

மிகவும் அத்தியாவசியமான பயணங்களைத் தவிர மற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

அத்தியாவசியப் பயணங்களை மேற்கொள்ளும் போது முன் தயாரிப்புகளுடன் பயணிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

டேவிட் பிலிப்ஸ் பனிப்புயல் போன்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளார்.