வவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை வவுனியாவிற்கு விஜயம் செய்ததை அடுத்து நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல், இணைப்பு அலுவலக திறப்பு விழா போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதால் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள பகுதிகளில் வெடிகுண்டு செயலிழப்பு பாதுகாப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், இரணுவம் மற்றும் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தை தடுக்க போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஇலங்கையில் பெளத்தம் கற்பிக்கும் ஆசிரியரால் 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த நிலை!
Next articleமுதல் ஆண்டு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!