முதல் ஆண்டு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் நடைமுறை பயன்பாடு மார்ச் 2023 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று (18) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் ஆரம்பமானது.

இதற்காக நாடு முழுவதும் சுமார் 450 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, முறையான பயிற்சி அளித்த பிறகு, முதலாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

இந்த மாகாண ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் பின்னர், நடைமுறைச் செயற்பாடுகளின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையிலிருந்து ஆங்கில மொழித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

Previous articleவவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
Next articleஇந்தியாவில் இலங்கை அகதி பெண் தூக்கிட்டு தற்கொலை : வெளியான காரணம்!