இந்தியாவில் இலங்கை அகதி பெண் தூக்கிட்டு தற்கொலை : வெளியான காரணம்!

இலங்கைத் தமிழ்ப் பெண் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் தாந்தோன்றிமலை அருகே உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் தர்மராஜேஸ்வரன். இவரது மனைவி யோகலதா (36).

இந்நிலையில், தர்மராஜேஸ்வரன் அடிக்கடி மது குடித்து வந்ததால், கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் யோகலதா மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யோகலதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாந்தோன்றிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமுதல் ஆண்டு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
Next articleயாழ். போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் இரு சடலங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!