யாழ் .இந்துக்கல்லுாரி பளுதுாக்கும் வீரன் செம்மணிக் குளத்தில் நீராடும் போது பலி!!

யாழ் இந்துவின் பளுதூக்கும் அணி 3 தடவை தேசிய ரீதியில் சம்பியன் பட்டம் வென்ற அணியினை தலைமை தாங்கிய 2018 உயர்தர பிரிவினை சேர்ந்த உ.சுஜந்தன் அவர்கள் குளத்தில் நீராடும் போது அகாலமரணமானார்.

இவரது வீடு செம்மணி வீதியில் அமைந்துள்ளது.

செம்மணியில் உள்ள குளத்தில் மீன் பிடித்ததன் பின்னர் குளத்தில் நீராடும் போது சுழியில் அமிழ்ந்து உயிரிழந்துருப்பது மிக வேதனையளிக்கின்றது.

உயிரியல் பிரிவில் பயின்றிருந்தார். தற்போது தேசிய ரீதியில் சாதிக்கும் யாழ் இந்து பளுதூக்கும் அணியின் பயிற்றுவிப்பாளர்.மிகவும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய குடும்ப பின்னணியில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ் இந்துவில் இணைந்திருந்தார்.

தற்போது யாழ் இந்துவில் பயிற்சியளிக்கும் நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் குடும்ப வறுமை காரணாமக மேசன் வேலைக்கும் சென்றுவந்தார்.

Previous articleவியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இருவரின் தவறான முடிவு : ஒருவர் கவலைக்கிடம்!
Next articleVisiting Visa மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமா !? வெளியானது அதிர்ச்சி தகவல்!