பாடசாலை மாணவர்களிடையே பரவும் நோய் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களிடையே தொழுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் பிரச்சாரம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரணவீர கருத்துப்படி, இவ்வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பேர் பாடசாலை மாணவர்கள்.

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இந்த நாட்டிலிருந்து 450 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மேல்மாகாணத்திலும் இந்நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Previous articleஓமானில் தூதரக அதிகாரிகளால் இலங்கைபெண்கள் துஸ்பிரயோகம்!
Next articleமகளை மீட்டுத்தாருங்கள்; தாய் ஒருவரின் கண்ணீர் கோரிக்கை!